சுற்றுலா இடங்கள்

திருமலை நாயக்கர் அரண்மனை
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டினார் . இந்த அரண்மனை , 58 அடி உயரம் கொண்டது. இந்த அரண்மனையில் 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன.அக்காலத்தில், இங்கு சொர்க்க விலாசம் , அரங்க விலாசம் என்ற இரண்டு முக்கிய பகுதிகள் அமைந்திருந்தது.
Read More
காந்தி மியூசியம்
ஏப்ரல் 15, 1959 ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.மகாத்மா காந்தி அவர்கள் மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மகாத்மா காந்தி அருங்காட்சியகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த நினைவு இல்லம் இருக்கின்றது.
Read More
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திகழ்கின்றது.முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில், இக்கோயில் அளவில் பெரியதாகும்.
Read More
தெப்பக்குளம்
மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் தெப்பக்குளம் கட்டப்பட்டது. தென் தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம் இதுவாகும்.இதன் பரப்பளவு 40 ஏக்கர் உள்ளது. இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது.
Read More
அதிசயம் (பூங்கா)
"இந்திய தீம் பூங்காக்களின் ராணி" என்று அழைக்க படும் அதிசயம் 2000 ஆம் ஆண்டு தொடங்க பட்டது. அதிசயம் பூங்காவின் பரப்பளவு 70 ஏக்கர்கள் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன் சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் போன்றவை காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
Read More
உலக தமிழ்ச் சங்கம்
தல்லாகுளம் பகுதியில் காந்தி மியூசியம் அருகில் அமைந்துள்ளது.உலக தமிழ் சங்கத்தின் மாடியில் இடது பக்கத்தில் ஒரு மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ளது. உலக தமிழ்ச்சங்கத்தின் மாடியில் வலது பக்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியின் செய்தி குறிப்புகள் மற்றும் அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வைக்கப் பட்டுள்ளது.
Read More
கீழடி அகழ்வாராய்ச்சி
மதுரையில் இருந்து தென் கிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த கீழடி அகழ்வாராய்ச்சி.2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆராய்ச்சியின் படி கீழடியில் ஒரு தொல்லியல் மேடு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் இரண்டு தொல்லியல் ஆராய்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டது. அந்த அகலாராய்வின்போது பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
Read More

பசுமலை கபாலீஸ்வரி அம்மன் கோவில் மாடக்குளம்
இந்த கோவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்பழங்காநத்தம் அடுத்து மாடக்குளம் என்ற பகுதியில் உள்ளது.இது ஒரு மலைக் கோயிலாகும். மாடக்குளம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டரில் மலையில் அமைந்துள்ளது.
Read More
நாகமலை நாக தீர்த்தம் நாகேஸ்வரர் திருக்கோவில்
மதுரையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் துவரிமான் வழியாக கொடிமங்கலம் என்ற ஊரிற்கு அருகில் அமைந்துள்ளது.கோவிலில் ராகுவும் கேதுவும் ஒன்றாக இணைந்த ஸ்தலம். இங்கு நூற்றாண்டு பழமையான மருத மரம் அமைந்துள்ளது. அங்குள்ள நாகம்மன் சன்னதி வடக்கு திசை பார்த்து அமைந்துள்ளதால் விசேஷமானதாக கருதப்படுகிறது.
Read More
அரிட்டாபட்டி
தமிழகத்தின் முதல் பல்லுயிர் சூழலியல் மண்டலமாக இது அமைந்துள்ளது.புத்த மத பிக்கு அரிட்டர் நினைவாக அரிட்டாப்பட்டி என்ற பெயர் வந்துள்ளது. இதன் பரப்பளவு 193.215 ஹேக்டெர் பரப்பளவு கொண்டுள்ளது. இங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குகைவரை சிவன்கோயில் அமைந்துள்ளது.
Read More
குட்லாடம்பட்டி அருவி
மதுரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வாடிப்பட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.சிறுமலை முகட்டு சரிவிலிருந்து வருகிற நீர் இந்த நீர்வீழ்ச்சியில் விழுகிறது.
Read More
கள்ளழகர் திருக்கோயில்
கள்ளழகர் கோயில்., 108 திவ்ய தேசக் கோயில்களில் ஒன்றான அழகர் கோயில் மதுரையிலுருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
Read More