மதுரை நகரம்
மதுரை – வரலாறும் கலாசாரமும் மிக்க மாவட்டம்
மதுரையின் வரலாற்று தகவல்கள்
கி.பி. 1223இல் இருந்து பாண்டியா்கள் மதுரையை சிறப்பாக ஆட்சி செய்தனர்.பாண்டியர்கள் மீன் சின்ன கொடியை பயன்படுத்தினர் .
பிறகு கி.பி. 1623-1659 வரை மதுரையை மன்னர் திருமலைநாயக்கா் ஆட்சி செய்தார்.
சங்க காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களால் மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.
மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆட்சியாளர் :
உயர்திரு M S சங்கீதா, I.A.S.,அவர்கள் தற்போதைய மாவட்ட ஆட்சியராக உள்ளார்.
வைகை ஆறு :
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற வைகை ஆறு நீளம் 258 கி.மீ. கொண்டது .
வைகை ஆறு தேனியில் தொடங்கி , மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் சென்றடைகிறது .
தூங்கா நகரம் :
காலை , மாலை இருவேளையும் மாநகரம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் என்பதால் மதுரையை தூங்கா நகரம் என்று அழைப்பர் .
கண்ணகி :
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் தலைவியாக வந்த கண்ணகி வாழ்ந்த ஊர் .
மாணிக்கவாசகர்
திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் மேலூர் திருவாதவூர் என்ற இடத்தில் பிறந்தார்.
மக்கள் தொகை மற்றும் ஊராட்சிகள்:
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆண்கள் 1526475 , பெண்கள் 1511777 என மொத்தம் 30,38,252 மக்கள் இங்குள்ளனர்.
ஊராட்சி ஒன்றியங்கள் & கிராமங்கள் :
13 ஊராட்சி ஒன்றியங்களும் ( திருமங்கலம் , மேலூர் , கொட்டாம்பட்டி , திருப்பரங்குன்றம் , மதுரை கிழக்கு , மதுரை மேற்கு , வாடிப்பட்டி , அலங்காநல்லூர் , உசிலம்பட்டி , செல்லம்பட்டி , டி கல்லுப்பட்டி , சேடப்பட்டி , கள்ளிக்குடி ),
420 கிராமங்களும் உள்ளன.
தொகுதி :
10 சட்டமன்ற தொகுதிகளும் ( திருமங்கலம் , மேலூர் , சோழவந்தான் , திருப்பரங்குன்றம் , மதுரை கிழக்கு , மதுரை மேற்கு , மதுரை வடக்கு , மதுரை தெற்கு , மதுரை மத்திய , உசிலம்பட்டி ),
1 லோக்சபா தொகுதியும் உள்ளன.
மதுரையின் முக்கிய சுற்றுலா தளங்கள் :
மீனாட்சிஅம்மன் கோவில்,அழகர் கோவில் ,திருப்பரங்குன்றம் கோவில் , பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் , திருமலை நாயக்கர் அரண்மனை , காந்தி அருங்காட்சியகம்,கீழடி அருங்காட்சியகம் ,தமிழ் சங்கம் , அரிட்டாபட்டி , குட்லாடம்பட்டி அருவி .
மலைகள்
மதுரையில் யானைமலை , பசுமலை ,நாகமலை போன்ற மலைகள் உள்ளன .
திருவிழாக்கள் மற்றும் மரபுகள்:
பொங்கல் பண்டிகை , ஜல்லிக்கட்டு , சித்திரைத் திருவிழா
ஊஞ்சல் உற்சவம் , ஆவணி மூலத் திருவிழா , நவராத்திரி திருவிழா
மதுரையின் பிரபலமான உணவுகள் மற்றும் மலர்கள்:
ஜிகர்தண்டா, பருத்திபால், கரி தோசை, வெஜ் / அசைவ கொத்து பரோட்டா.
பிரபலமான மலர் :
மல்லிகைப் பூ
இந்தியாவின் பிற நகரங்களுக்கு மதுரையிலிருந்து மல்லிகைப் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
Back to previous page