மதுரை பேமஸ் ஃபுட்ஸ்
1, ஃபேமஸ் ஜிகர்தண்டா
இந்த ஃபேமஸ் ஸ்கர்தண்டா கூல் ட்ரிங்க்ஸ் மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள பேமஸ் ஜிகர்தண்டா கடையில் கிடைக்கும்.மதுரையின் முக்கிய மற்றும் சுவைமிக்க குளிர்பானம்.
2, பிஸ்கட் கப் டீ
இது மதுரை போத்தீஸ் துணிக்கடை எதிரில் இந்த பிஸ்கட் கப் டீ கடை இருக்கும். இங்கு பிஸ்கட் கப்பில் டீயை கொடுப்பார்கள். டீ குடித்து முடித்தவுடன் இந்த பிஸ்கட் கப்பையும் சாப்பிட்டு விடலாம்.
3, பிரேம விலாஸ் அல்வா
பிரேம விலாஸ் அல்வா கடை மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து தங்கரீகல் தியேட்டர் எதிரில் இருக்கும். அல்வாவை தேக்கு இலையில் வைத்து சுட சுட தருவார்கள். மிகவும் அருமையாக இருக்கும்.
4, ரோஸ் மில்க்
மதுரை பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது இந்த ரோஸ் மில்க் கடை. இங்கு ரோஸ் மில்க் மிகவும் அருமையாக இருக்கும்.
5 , பன் பட்டர் ஜாம்
மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அடுத்து ஆரப்பாளையம் சர்ச்சுக்கு எதிரில் ஒரு தள்ளு வண்டியில் செய்து தருவார்கள். இது மிகச் சிறப்பாக இருக்கும். இதை சாப்பிட ஏராளமான மக்கள் விரும்பி வருவார்கள்.
6 , இளநீர் சர்பத்
தமிழ்ச் சங்கம் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை சந்தை அருகில் இந்த இளநீர் சர்பத் கடை அமைந்துள்ளது. இந்த இளநீர் சர்ப்பத்தை கேட்டவுடன் இளநீரை வெட்டி உடனே செய்து தருவார்கள். இந்த இளநீர் சர்பத் மிக அருமையாக இருக்கும்.
7 , நாத்தங்காய் ஜூஸ்
இந்த ஜூஸ் கடை மதுரை மீனாட்சி பஜார் கடைசியில் அமைந்துள்ளது. இது நன்றாக இருக்கும்.
8 , கரண்டி ஆம்லெட்
மதுரை அலங்காநல்லூர் என்ற ஊரில் செல்லம் மெஸ் கடையில் இந்த கரண்டி ஆம்லெட் சிறப்பாக இருக்கும்.
9 , கருப்பட்டி பருத்தி பால்
மதுரை முனிச்சாலை பகுதியில் திருமலை மடை கருப்புசாமி பருத்திப்பால் கடையில் இந்த கருப்பட்டி பருத்திப்பால் செய்து தரப்படுகிறது.இது மிகவும் சுவையானதாக இருக்கும். மக்கள் அதிகமாக இதை விரும்பி குடிக்க வருவார்கள்.
10 , கறி தோசை
மதுரை வடக்கு மாசி கோனார் சூப் கடையில் இந்த கறி தோசை மிகவும் சிறப்பாக இருக்கும்.
11 , வெள்ளை அப்பம்
இந்த வெள்ளை அப்பம் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் வடக்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள நூறு வருட பழமையான கோபு ஐயங்கார் கடையில் சிறப்பாக இருக்கும்.
12 , இட்லி
மதுரை போத்தீஸ் துணிக்கடை எதிரில் முருகன் இட்லி கடை அமைந்துள்ளது.
இங்கு இட்லி மிகச் சிறப்பாக இருக்கும்.
Back to previous page