இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்

முகவரி :
இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி, மதுரை-625 001.நடை திறப்பு :
காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை .சிறப்பம்சம் :
இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் , கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு பின்புறத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர்.
இத்தலம் பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது.
அபிஷேகம் :
மூலவருக்கு வருடத்தில் 12 அமாவாசை , 12 பௌர்ணமி மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களில் மொத்தம் 54 நாட்களில் மட்டும் நடைபெறுகிறது.
சன்னதி :
ஜுரத்தைக் நீக்கும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி அளிக்கும் சன்னதி அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் விசாலாட்சியுடன் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார்.
இங்கு அம்பாள் சன்னதி பீடத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.
இங்கு பைரவர் சன்னதி அமைந்துள்ளது.
Back to previous page