அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்

முகவரி :
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்,மதுரை - 625 301
நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை.
மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை.
சிறப்பம்சம் :
கள்ளழகர் கோயில்., 108 திவ்ய தேசக் கோயில்களில் ஒன்றான அழகர் கோயில் மதுரையிலுருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதப்பட்ட சங்க இலக்கியமான பரிபாடல் , சிலப்பரிகாரம், இதிகாசமான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இந்த மலையை பற்றி அப்பொழுதே வர்ணிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அபரஞ்சி தங்கம் எனப்படும் அரிய வகை தங்கத்தால் ஆன சுவாமி திருமேனிகள் இரண்டு கோவில்களில் மட்டும் தான் உள்ளது.
1 , திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில்
2 , நம் கள்ளழகர் ( இங்கு ) .
இந்த அழகர் மலை 18 கிலோமீட்டர் நீளமும் 1049 அடி உயரமும் கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
இந்த மலைக்கு திருமாலிருன் சோலை, சோலைமலை, வனகிரி போன்ற பல பெயர்கள் உள்ளது.
இங்கு பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது.
கும்பாபிஷேகம் :
10.07.2011 ல் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம்( கும்பாபிஷேகம் ) சிறப்பாக நடைபெற்றது.
சன்னதி :
மூலவர் பெருமாள் கைகளில் சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் காதை ஆகிய பஞ்ச ஆயுதங்களுடன் காணப்படுகிறார் .
ஆழ்வார் சன்னதிக்கு மேற்கே கல்யாண சுந்தரவல்லி தாயார் சன்னதி அமைந்துள்ளது.
தாயார் சன்னதி பின்புறம் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.
மூன்றாம் பிரகாரத்தில் பள்ளி அறை அருகில் யோக நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது.
வடமேற்கு மூலையில் ஆண்டாள் சன்னதி அமைந்துள்ளது.
சுந்தரபாண்டியன் மண்டபத்தின் வடபுறத்தில் கிருஷ்ணர் சன்னிதி உள்ளது.
120 சாசனங்கள் கல்வெட்டுகளாக உள்ளது.
ஒன்பது அடி கொண்ட கற்படுகை உள்ளது.
இதன் கருவறை வட்ட வடிவில் அமைந்துள்ளது.
இங்கு தமிழ் வட்ட எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோவிலின் வெளிபுறத்தில் கருப்பணசாமி காவல் தெய்வமாக இருக்கிறார்.
சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வெளியில் வரும் பொழுது காவல் தெய்வமான கருப்பசாமி இடம் உத்தரவு வாங்கிய பின்பு தான் கோயிலை விட்டு வெளியே வருவார். நிகழ்வு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
அழகர் கோவிலின் மலையில் பழமுதிர்சோலை முருகன் கோவிலும்,நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது .
மண்டபம் :
திருக்கல்யாண மண்டபம் :
தசாவதாரக்காட்சிகள் சிற்பங்களாக அமையப்பட்டுள்ளன.
வசந்த மண்டபம் :
தெற்கே ஆடிவீதியில் கோயில் இராஜகோபுர மதிலில் உள்ள வாசலின் வழியே தெற்குநோக்கி இறங்கினால் வசந்தமண்டபம் உள்ளது .
பூஜை விபரம்
எண் | பூஜை | நேரம் |
---|---|---|
1 | விஸ்வரூப பூஜை | 06:00 AM - 06:10 AM |
2 | பொங்கல் பூஜை | 07:35 AM - 07:45 AM |
3 | உச்சிக்கால பூஜை | 12:30 PM - 12:35 PM |
4 | சாயரட்சை பூஜை | 05:00 PM - 05:10 PM |
5 | நித்ய அனுஷ்டானம் பூஜை | 06:00 PM - 06:15 PM |
6 | திருவாராதனம் (இரவு பூஜை) | 07:50 PM - 08:00 PM |
சேவை - கட்டண விவரம் :
எண் | சேவை | கட்டணம் |
---|---|---|
1 | மாவிளக்கு | 2.00 |
2 | அர்ச்சனை | 10.00 |
3 | பெருமாள் சன்னதி சிறப்பு நுழைவு | 10.00 |
4 | அழகர்கோவில் - பழமுதிர்ச்சோலை பேருந்து | 10.00 |
5 | பதினெட்டாம்படி பரிவட்டம் | 10.00 |
6 | பிரசாதம் - ( அப்பம் , அதிரசம்) (1 க்கு ) | 10.00 |
7 | பிரசாதம் - தோசை | 40.00 |
8 | கேமரா | 50.00 |
9 | உபய கால்நடை காணிக்கை | 100.00 |
10 | பதினெட்டாம்படி நிலை மாலை சாத்துதல் | 100.00 |
11 | கால்நடை காணிக்கை நன்கொடை | 100.00 |
12 | அன்னதானம் நன்கொடை ( ஒரு நாளைக்கு ) | 3500.00 |
திருவிழா :
சித்திரை பௌர்ணமி நாளில் வரும் சித்திரை திருவிழா ,
மாசி மாதத்தில் (பிப்ரவரி–மார்ச்) வரும் தெப்பத் திருவிழா,
மார்கழியில் வரும் (டிசம்பர்–ஜனவரி) வைகுண்ட ஏகாதசி திருவிழா,
செப்டம்பர்–அக்டோபர் மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழா,
ஆகியவை முக்கியமான திருவிழாக்களாகும்.
அன்னதானம் :
தினசரி திருக்கோயிலுக்கு வருகை தரும் 100 நபர்களுக்கு நண்பகல் 12.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
Back to previous page