வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில்

முகவரி :
வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில் ,தெப்பக்குளம்,வண்டியூர்,மதுரை - 525009நடை திறப்பு :
காலை 6மணிமுதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்சிறப்பம்சம் :
வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் காமராஜர் சாலையில் உள்ளது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இக்கோவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இங்குள்ள அம்மன் காவல் தெய்வமாக உள்ளார்.
துர்க்கை அம்மனும், மாரியம்மன் சேர்ந்து ஒரே அம்மனாக இங்கு காட்சி தருகிறார்.
பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக அம்மன் இங்கு வலக்காலை இடக்காலின் மீது மடக்கி உட்கார்ந்த நிலையில் உள்ளார்.
மதுரையில் உள்ள மற்ற கோயில்களில் விழா என்றால் முதன் முதலில் இந்த மாரியம்மனை பூஜை செய்த பின்னரே விழாவை தொடங்குவார்கள்.
திருவிழா :
தைப்பூசத் திருநாளில் தெப்பத்திருவிழா இதன் தெப்பக்குளத்தில் கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத் திருநாளும்,
பூச்சொரிதல் திருவிழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
Back to previous page