மேலூர்

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,017 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 20,405 ஆண்கள், 19,612 பெண்கள் ஆவார்கள்.மேலூரில் 9,872 வீடுகள் உள்ளன
கள்ளழகர் பெருமாள் குடி கொண்டிருக்கும் அழகர் கோவில் அமைந்துள்ள அழகர் மலை இந்த மேலூரில் தான் உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக திகழும் பழமுதிர்ச்சோலை இங்கு அமைந்துள்ளது.
திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் இங்கு உள்ளது.
சமணர் படுகைகள் குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ள அரிட்டாப்பட்டி என்ற ஊர் இந்த மேலூரில் உள்ளது.
திருவிழா
மேலூர் அருகே 58 கிராமங்களை உள்ளடக்கிய வெள்ளலூர் நாடு என்னும் ஊரில் ஏழை காத்தம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
மேலூர் சிங்கம்மாள் கோயில் திருவிழா திரௌபதி அம்மன் கோவில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்
சருகு வளையப்பட்டியில் மீன்பிடித் திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெறும்.
அம்பலகாரன்பட்டி , ஆமூர் , அரசப்பன்பட்டி , ஆட்டுக்குளம் , அரிட்டாபட்டி , கீழவளவு , கீரனூர் , கீழையூர் , கொங்கம்பட்டி , கொட்டக்குடி , குறிச்சிப்பட்டி , கல்லம்பட்டி , கிடாரிப்பட்டி , இ.மலம்பட்டி , நரசிங்கம்பட்டி , நாவினிபட்டி , பதினெட்டாங்குடி , பூஞ்சுத்தி , பனங்காடி , புலிப்பட்டி , புதுசுக்காம்பட்டி , சாத்தமங்கலம் , சருகுவளையப்பட்டி , சூரக்குண்டு , செம்மினிபட்டி , தெற்குத்தெரு , திருவாதவூர் , தனியாமங்கலம் , உறங்கான்பட்டி , டி.வெள்ளாளப்பட்டி , வண்ணாம்பாறைபட்டி , வேப்படப்பு , வெள்ளலூர் , வெள்ளரிப்பட்டி , அ.வளையப்பட்டி , கோட்டநத்தம்பட்டி இங்கு உள்ளது.
Back to previous page