யோக நரசிம்மர் திருக்கோவில்

முகவரி :
யோக நரசிம்மர் திருக்கோவில் ,யானைமலை ,ஒத்தக்கடை ,மதுரைநடை திறப்பு :
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 5 மணி முதல் 8 மணி வரைசிறப்பம்சம் :
யோக நரசிம்மர் கோயில் , தொன்மையான குடைவரைக் கோவில்.
இக்கோவில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் அவரின் அமைச்சராக இருந்த மதுரகவி என்பவரால் கி.பி. 770 இல் கட்டப்பட்டது.
சிறப்பு :
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும்.
சன்னதி :
இக்கோவில், நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும்.
மூலவர் நான்கு கைகளுடன் அமர்ந்திருக்கிறார். இவற்றில் இரண்டு கைகள் மடியில் இருக்கும் , மற்ற இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை வைத்திருப்பார்.
கோயிலுக்குள் சென்றவுடனேயே தெற்கில் தாயார் சன்னதி உள்ளது.
கோவிலுக்கு வெளியே ஆஞ்சநேயர் சன்னதி , கருடன் சன்னதி மற்றும் விநாயகர் சன்னதி உள்ளன.
Back to previous page