அரிட்டாபட்டி

தமிழகத்தின் முதல் பல்லுயிர் சூழலியல் மண்டலமாக இது அமைந்துள்ளது.
புத்த மத பிக்கு அரிட்டர் நினைவாக அரிட்டாப்பட்டி என்ற பெயர் வந்துள்ளது.
இதன் பரப்பளவு 193.215 ஹேக்டெர் பரப்பளவு கொண்டுள்ளது.
இங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குகைவரை சிவன்கோயில் அமைந்துள்ளது.
2200 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான குகை கோயில்கள் இங்கு உள்ளன.
இங்கு 72 ஏரிகள் 7 மலை குன்றுகள் பல்வேறு நீரூற்றுகள் உள்ளன.
இந்த சூழ்நிலையால் இங்கு 600க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள், 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்விடமாக கொண்டு இங்கு உள்ளன.
250 சமணப் படுகைகள் அமைந்துள்ளன.
தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.
Back to previous page