திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா

பங்குனித் திருவிழா இங்கு 15 நாட்கள் நடைபெறும்.
முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருவிழா.
இரண்டாம் நாள் மாலை விநாயகர் சுவாமி சப்பரத்தில் வலம் வருதல்.
மூன்றாம் நாள் காலை முருகப்பெருமான் தங்கப் பல்லாக்கில் தெய்வானை உடன் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிப்பார்.
நான்காம் நாள் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
ஐந்தாம் நாள் வெள்ளி பூத வாகனத்தில் காட்சியளிப்பார்.
ஆறாம் நாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளிப்பார்.
ஏழாம் நாள் சேஷ வாகனத்தில் காட்சியளிப்பார்.
எட்டாம் நாள் யானை வாகனத்தில் சாமி மக்களுக்கு காட்சி அளிப்பார்.
ஒன்பதாம் நாள் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியளிப்பார்.
பத்தாம் நாள் வெள்ளி ஆட்டுக் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு காட்சியளிப்பார்.
பதினொன்றாம் நாள் பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
பனிரெண்டாம் நாள் தங்க குதிரை வாகனத்தில் அருள் பாலிப்பார். அன்று முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரம் நிகழ்ச்சி நடைபெறும்.
13 ஆம் நாள் தங்கமயில் மற்றும் தங்க குதிரை வாகனத்தில் காட்சியளிப்பார். இன்று சூரசம்கார லீலை நடைபெறும்.
14 ஆம் நாள் பச்சைக் குதிரை வாகனத்தில் காட்சியளிப்பார். பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறும்
15 ஆம் நாள் வெள்ளி யானை வாகனத்தில் அருள் பாலிப்பார். சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும்.
பதினாறாம் நாள் காலை 6 மணி அளவில் திருத்தேரில் உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
17ஆம் நாள் தங்கமயில் வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிப்பார்.
Back to previous page