தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா

இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.
முதல் நாள் கொடியேற்றம்.
திருவிழாவின் ஐந்தாம் நாள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்து மக்கள் நேர்த்தி கடன் செய்வார்கள்.
அன்று அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
திருவிழாவின் ஏழாம் நாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.
எட்டாம் நாள் பூ பல்லாக்கு வாகனத்தில் அம்மன் காட்சியளிப்பார்.
ஒன்பதாம் நாள் மாலை சட்ட தேரில் உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
பத்தாம் நாள் பக்தர்கள் மாவிளக்கு வைக்கும் பொங்கல் வைக்கும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
Back to previous page