நாகமலை நாக தீர்த்தம் நாகேஸ்வரர் திருக்கோவில்

இக்கோவில் மதுரையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் துவரிமான் வழியாக கொடிமங்கலம் என்ற ஊரிற்கு அருகில் அமைந்துள்ளது.
கோவிலில் ராகுவும் கேதுவும் ஒன்றாக இணைந்த ஸ்தலம்.
இங்கு நூற்றாண்டு பழமையான மருத மரம் அமைந்துள்ளது.
அங்குள்ள நாகம்மன் சன்னதி வடக்கு திசை பார்த்து அமைந்துள்ளதால் விசேஷமானதாக கருதப்படுகிறது.
இங்கு முத்துச்சாமி சித்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. இவர்தான் இந்தக் கோயிலை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.
சிறப்பு :
ஒவ்வொரு மாத பௌர்ணமியும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இங்கு ஆடி அமாவாசை அன்று பக்கத்து கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிடுவார்கள்.
சிவன் ராத்திரி அன்று விசேஷ பூஜைகள் இங்கு நடைபெறும்.
இக்கோவிலில் உள்ள நாக தீர்த்தத்தில் தீர்த்தமாடி ராகு மற்றும் கேதுவுக்கு நம் கையாலேயே அபிஷேகம் செய்தால் தடையாக இருந்த திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் நிவர்த்தி ஆகும்.
தினந்தோறும் கோயில் திறந்திருக்கும் வெள்ளி செவ்வாய் மற்றும் ஞாயிறு மற்றும் பிரதோஷம் ஆகிய தினங்களில் மக்கள் அதிகமாக வருவார்கள்.
Back to previous page