ஊராட்சி ஒன்றியங்கள்

திருமங்கலம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து தந்த திருமாங்கல்யபுரமே நாளடைவில் திருமங்கலம் என பெயர் வந்தது.தமிழகத்திலேயே ஒரே ஒரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது இந்த திருமங்கலத்தில் மட்டுமே.
Read More

கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 27 கிராமங்களும் அமைந்துள்ளன.கொட்டாம்பட்டி அருகில் ஐந்து மீட்டர் தொலைவில் பொட்ட பட்டி என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
Read More
திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் இங்கு அமைந்துள்ளது.திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் தென்பரங்குன்றம் என்ற இடத்தில் கிபி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உமையாண்டவர் கோவில் உள்ளது. இது ஒரு குகைவரை கோயில் ஆகும்.காசி விஸ்வநாதர் கோயில் திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் 650 படிக்கட்டுகள், 1050 அடி உயரம் கொண்டதாக உள்ளது.
Read More
மதுரை கிழக்கு
2000 ஆண்டு பழமையான கல்வெட்டுக்கள் குகை வரை கோயில்கள் சமணப்படுகைகள் அமைந்துள்ள யானைமலை இங்கு உள்ளது.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இங்கு உள்ளது.இலந்தைகுளம் எல்காட் ஐ டி பார்க் இங்கு உள்ளது.புகழ்பெற்ற பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் இங்கு உள்ளது.
Read More
மதுரை மேற்கு
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 29 கிராமங்கள் உள்ளன.அதிசயம் வாட்டர் தீம் பார்க் சமயநல்லூர் அருகில் பறவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.உசிலம்பட்டி , சமயநல்லூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன.
Read More
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 கிராமங்கள் உள்ளன.இங்கு பொன் பெருமாள் மலை அமைந்துள்ளது.வாடிப்பட்டியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் என்ற பழனியாண்டவர் கோவில் இங்கு அமைந்துள்ளது.இங்கு குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
Read More
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 37 கிராமங்கள் அமைந்துள்ளன.இங்கு உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு வருடாந்தோறும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் . தனிச்சியம் , வாவிடமருதூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன
Read More
உசிலம்பட்டி
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 கிராமங்கள் உள்ளன.தென் கைலாயம் என்று போற்றப்படும் சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம் கோயில் இங்கு அமைந்துள்ளது. தொட்டப்பநாயக்கனூர் , வடுகபட்டி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன .
Read More
செல்லம்பட்டி
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 29 கிராமங்கள் உள்ளன. கொடிக்குளம் , விக்கிரமங்கலம் , நாட்டார்மங்கலம் , கருமாத்தூர் , பன்னியான் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன .
Read More
டி கல்லுப்பட்டி
டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 42 கிராமங்கள் உள்ளன.ஏழு ஊர் அம்மன் சப்பரத் திருவிழா மிகசிறப்பாக நடைபெறும்.தேவங்குறிச்சி அம்மன் கல்லுப்பட்டி அம்மன் வன்னிவேலம்பட்டி அம்மன், கிளாங்குளம் அம்மன், சத்திரப்பட்டி அம்மன், காடனேரி அம்மன், அம்மாபட்டி அம்மன் என்ற ஏழு ஊர் அம்மன் சப்பரத் திருவிழா மிகச் சிறப்பாக டி கல்லுப்பட்டியில் நடைபெறும்.
Read More
சேடப்பட்டி
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராமங்கள் அமைந்துள்ளன. அத்திபட்டி , பெருங்காமநல்லூர் , உத்தபுரம் , வேப்பம்பட்டி ,திருமாணிக்கம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன .
Read More
கள்ளிக்குடி
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 36 கிராமங்கள் உள்ளன. கரிசல்கலாம்பட்டி , மைதான்பட்டி , கல்லணை , புளியங்குளம் , உலகாணி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. .
Read More