வாடிப்பட்டி

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 கிராமங்கள் உள்ளன.
"வாடிப்பட்டி" என்ற பெயர் வாயில் அல்லது வாசல் என்ற மூல வார்த்தையில் உருவானது, அதாவது 'கதவு' அல்லது 'நுழைவாயில்'. இது மதுரையின் வரலாற்று எல்லைகளில் ஒன்றாகவும், நுழைவாயிலாகவும் இருந்தது, அதே போல் பாண்டியர்களின் முகாம் இடமாகவும் இருந்தது, இது குலசேகர பாண்டியன் காலத்திலிருந்து தெளிவாகிறது.
இந்திய 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 26,830 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில் 13,326 ஆண்கள், 13,504 பெண்கள் ஆவார்கள்.
சிறப்பு
குட்லாடம்பட்டி அருவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
இங்கு பொன் பெருமாள் மலை அமைந்துள்ளது.
வாடிப்பட்டியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் என்ற பழனியாண்டவர் கோவில் இங்கு அமைந்துள்ளது.
இங்கு குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
அருகில் கிட்லம்பட்டி என்ற ஊரில் மிகப்பெரிய சிவன் கோயில் அமைந்துள்ளது.
ஆண்டிபட்டி , இரும்பாடி , கட்டக்குளம் , கருப்பட்டி , காடுபட்டி , குருவித்துறை , கச்சைகட்டி , குட்லாடம்பட்டி , மேலக்கால் , மன்னாடிமங்களம் , முள்ளிப்பள்ளம் , நாச்சிக்குளம் , நெடுங்குளம் , சி.புதூர் , ரிஷபம் , சித்தாலங்குடி , திருவாலவாயநல்லூர் , திருவேடகம் , தென்கரை , விராலிபட்டி , பூச்சம்பட்டி , ராமையன்பட்டி , செமினிபட்டி இங்கு அமைந்துள்ளது.
Back to previous page