காந்தி மியூசியம்

காந்தி மியூசியம்.., ஏப்ரல் 15 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி அவர்கள் மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக மகாத்மா காந்தி அருங்காட்சியகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த நினைவு இல்லம் இருக்கின்றது.
இங்கு காந்திஜி உபயோகப்படுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன.
கோட்சேவினால் மகாத்மா படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
124 காந்திஜியின் குழந்தை பருவ நிழற்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவர் பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, போர்வை, சால்வை, காலணி போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
அவர் கைப்பட எழுதிய கடிதம் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Back to previous page