T.கல்லுப்பட்டி ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா

ஏழு ஊர் மக்கள் இணைந்து இந்த அம்மன் சப்பரத் திருவிழாவை நடத்துவார்கள்.
தேவன் குறிச்சியில் ஆதிபராசக்தி அம்மன் ,
டி கல்லுப்பட்டியில் சரஸ்வதி அம்மன் ,
வன்னி வேளாண் பட்டியில் மகாலட்சுமி அம்மன் ,
அம்மா பட்டியில் பைரவி அம்மன் ,
காடனேரி அம்மன்,
கீழான்குளம் அம்மன்,
சத்திரப்பட்டி அம்மன் என ஏழு ஊர் அம்மன்களும் ஒரே நாளில் ஒரே இடத்தில் சப்பரத்தில் காட்சியளிப்பார்கள்.
45 அடி உயர இந்த மூங்கில் சப்பரத்தை ஏழு ஊர் மக்கள் தலையில் சுமந்து கொண்டு வருவார்கள்.
இத்திருவிழா மிகச் சிறப்பாக இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
Back to previous page