மதுரை ECO பார்க்

இந்த பார்க் மதுரை கோரிப்பாளையம் அருகே மதுரை கார்ப்பரேஷன் உள்ளே அமைந்துள்ளது.
மூன்று வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு டிக்கெட் விலை ஐந்து ரூபாயாக உள்ளது .
காலை 9.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 5 மணி முதல் ஒன்பது மணி வரை பூங்கா திறந்திருக்கும்.
பூங்காவின் முன்பே வந்தவுடன் நிறைய மரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
கிருத்திகை அத்தி மரம், விசாகம் விளாமரம், உத்திரம் அரளி மரம் போன்ற பல மரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
பழைய இரும்பு மற்றும் பைக்கில் உதிரி பாகங்கள் ஆகியவற்றை வைத்து சில பிரமாண்ட பொருட்கள் செய்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டகம், கொக்கு, மான், குதிரை, ஆந்தை,காளை போன்ற காட்சிப் பொருட்கள் பழைய இரும்பு மற்றும் வண்டியின் உதிரி பாகங்கள் ஆகியவற்றை வைத்து செய்து வைக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் திருஉருவச்சிலையை பழைய இரும்பு பொருட்களால் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
Back to previous page