திருமலை நாயக்கர் அரண்மனை

திருமலை நாயக்கர் அரண்மனை , மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டினார் .
இந்த அரண்மனை , 58 அடி உயரம் கொண்டது.
இந்த அரண்மனையில் 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன.
அக்காலத்தில், இங்கு சொர்க்க விலாசம் , அரங்க விலாசம் என்ற இரண்டு முக்கிய பகுதிகள் அமைந்திருந்தது.
சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும்,
அரங்க விலாசம் அவரது தம்பி வசிப்பிடமாகவும் இருந்தது.
உள்ளே சென்றவுடன் மன்னர் பயன்படுத்திய பெரிய சிம்மாசனம் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
தூண்கள் , சுவற்றின் மேலே உள்ள சிற்பக் கலைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.
சிம்மாசனம் இருக்கும் இடத்தை கடந்த உடன் அரண்மனையின் நடன அரங்கம் உள்ளது. தற்பொழுது இங்கே பொருட்கள் அனைத்தும் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
உள்ளே பெயிண்டிங் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளது.
அவர்கள் பயன்படுத்திய பானைகள், பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
சிலைகள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
அரங்கத்தை கடந்த உடன் கல்லெழுத்து கடை கூடம் உள்ளது.
இங்கு தமிழில் எழுதிய ஓலைச்சுவடிகள் மற்றும் கல் எழுத்துக்கள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு, இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது.
ஒலி-ஒளி காட்சி :
நாள்தோறும் மாலை 6.45 க்கு ஆங்கிலத்திலும்,
இரவு 8 மணிக்கு, தமிழிலும் நடைபெறுகிறது.
Back to previous page