திருமங்கலம் பத்ரகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா

முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாட்கள் திருவிழா நடைபெறும்.
முதல் நாள் அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளிப்பார்.
இரண்டாம் நாள் பூத வாகனத்தில் வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
மூன்றாம் நாள் அன்ன வாகனத்தில் காட்சியளிப்பார்.
நான்காம் நாள் காமதேனு வாகனத்தில் காட்சியளிப்பார்
ஐந்தாம் நாள் அம்மன் குதிரை வாகனத்தில் அருள் பாலிப்பார்.
ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில் வலம் வந்து அருள் பாலிப்பார்.
ஏழாம் நாள் பூ பல்லாக்கு அருள் பாலிப்பார்
எட்டாம் நாள் பூச்சப்பரத்தில் வலம் வந்து மக்களுக்கு காட்சியளிப்பார்.
ஒன்பதாம் நாள் முளைப்பாரிகை நிகழ்ச்சி நடைபெறும். பிறகு நாக வாகனத்தில் காட்சியளிப்பார்.
பத்தாம் நாள் குதிரை வாகனத்தில் வலம் வந்து அம்மன் கோயில் முன்பு சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.
பதினொன்றாம் நாள் அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபடுவர்.
12 ஆம் நாள் யானை வாகனத்தில் மக்களுக்கு அம்மன் அருள் பாலிப்பார்.
13ம் நாள் அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார்.
அன்று மாலை தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
Back to previous page