மதுரையில் எடுத்த திரைப்படங்கள்
மீனாட்சி அம்மன் கோவில்
1, கில்லி படத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிகர் பிரகாஷ்ராஜை அடித்து திரிஷாவை காப்பாற்றும் காட்சி இந்த கோபுரத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது.
2, ஜிகர்தண்டா படத்தில் கண்ணம்மா கண்ணம்மா பாடல் மேற்கு கோபுரத்தின் முன்னால் எடுக்கப்பட்டது.
3, நடிகர் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தில் அவ்வா அவ்வா பாடல் வடக்கு கோபுரத்தின் முன்னால் எடுக்கப்பட்டது.
4, நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் மதுரை மரிக்கொழுந்து பாடல் இங்கு எடுக்கப்பட்டது.
அழகர் கோவில்
1, நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் பாடல் இங்கு எடுக்கப்பட்டது.
2, நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தின் நிறைய காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டது.
திருமலை நாயக்கர் அரண்மனை
1, நடிகர் விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர் படத்தின் மனம் விரும்புதே பாடல் இங்க எடுக்கப்பட்டது.
2, நடிகர் அரவிந்த்சாமி நடித்த பாம்பே படத்தின் கண்ணாளனே பாடல் இங்கு எடுக்கப்பட்டது.
3, நடிகர் விக்ரம் நடித்த பீமா படத்தின் ரகசிய கனவு பாடல் இங்கு எடுக்கப்பட்டது.
4, நடிகர் விஷ்ணு விஷால் நடித்த குள்ளநரி கூட்டம் படத்தின் விழிகளிலே பாடல் இங்கு எடுக்கப்பட்டது.
தெப்பக்குளம்
1, நடிகர் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மதுர மரிக்கொழுந்து பாடல் இங்கு எடுக்கப்பட்டது.
2, நடிகர் விஷால் நடித்த திமிரு படத்தின் மானாமதுரை பாடல் இங்க எடுக்கப்பட்டது.
3, தகராறு படத்தின் திருட்டுப் பயபுள்ள பாடல் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.
Back to previous page