திருப்பரங்குன்றம்

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39,009 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் இங்கு அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் தென்பரங்குன்றம் என்ற இடத்தில் கிபி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உமையாண்டவர் கோவில் உள்ளது. இது ஒரு குகைவரை கோயில் ஆகும்.
காசி விஸ்வநாதர் கோயில் திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் 650 படிக்கட்டுகள், 1050 அடி உயரம் கொண்டதாக உள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.
ஆன்மீகத் தலங்கள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில்
திருப்பரங்குன்றம் தர்கா
திருவிழா
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாதம் தைப்பூச திருவிழா தேரோட்டம், பங்குனி தேரோட்டத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
எலியார்பத்தி , ஏர்குடி அச்சம்பத்து , நாகமலைபுதுக்கோட்டை , நல்லூர் , நெடுமதுரை , நிலையூர் 1 பிட் , நிலையூர் 2 பிட் , கரடிப்பட்டி , கீழக்குயில்குடி , கீழமாத்தூர் , கொடிமங்கலம் , கொம்பாடி , குசவன்குண்டு , மேலமாத்தூர் , மேலக்குயில்குடி , ஒத்தை ஆலங்குளம் , பெரிய ஆலங்குளம் , பனையூர் , சோளங்குருணி , சூரக்குளம் , பாரபத்தி , வலையபட்டி , வேடர்புளியங்குளம் , பெருங்குடி , புளியங்குளம் , புதுக்குளம் 1 பிட் , சக்கிலிப்பட்டி , சாம நத்தம் , சிலைமான் , தனக்கன்குளம் , விளாச்சேரி , விரகனூர் , விராதனூர் , தோப்பூர் , துவரிமான் , வடபழஞ்சி , வடிவேல்கரை , வலையங்குளம் அமைந்துள்ளது.
Back to previous page