தெப்பக்குளம்

மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் தெப்பக்குளம் கட்டப்பட்டது.
தென் தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம் இதுவாகும்.
இதன் பரப்பளவு 40 ஏக்கர் உள்ளது.
இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது.
சுமார் 15 அடி உயரத்துக்கு தெப்பக்குளத்தின் நான்குபுறமும் கல்லினால் சுவர் கட்டப்பட்டிருக்கிறது.
அங்கு நடுவில் அழகான தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு விநாயகர் சிலை உள்ளது.
வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது.
இங்கு ஆடி மாத அம்மன் திருவிழா தைப்பூசத் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெறும்.
காலை நேரங்களில் மக்கள் குளத்தை சுற்றி நடைப்பயிற்சி செய்கிறார்கள்.
இரவில் வண்ண ஒளிகளுடன் கடற்கரை போன்று பொழுதுபோக்கு இடமாக உள்ளது.
குளத்தை சுற்றிவர படகு சவாரி இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
Back to previous page