உலக தமிழ்ச் சங்கம்

இடம்
தல்லாகுளம் பகுதியில் காந்தி மியூசியம் அருகில் அமைந்துள்ளது.
1981இல் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அன்றைய முதல்வர் திரு எம் ஜி ஆர் அவர்கள் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
பிறகு 2011 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் அமைக்க சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கி பணி தொடங்க உத்தரவிட்டார்.
உலக தமிழ் சங்கத்தின் மாடியில் இடது பக்கத்தில் ஒரு மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ளது.
உலக தமிழ்ச்சங்கத்தின் மாடியில் வலது பக்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியின் செய்தி குறிப்புகள் மற்றும் அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வைக்கப் பட்டுள்ளது.
அந்தக் காலத்திலேயே கீழடியில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு சுடுமன் கற்கள் செய்து வைத்திருந்தார்கள். அது காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
கீழடி மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
கீழடியில் சுடுமன்னாள் ஆன காதணிகளை மக்கள் உபயோகித்திருந்தார்கள் அதை இங்கு காட்சிப்பொருளாக வைத்துள்ளார்கள்.
கீழடியில் கிடைத்த தங்க உபகரணங்கள் தோடு, செயின் போன்ற பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
அங்கு கிடைத்த உரை கிணறும் இங்கு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
கீழடியில் கிடைத்த தமிழ் மொழி பொறித்த மண் ஓடுகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கே பார்வையாளர் அரங்கம் உள்ளது.
உலக தமிழ் சங்கத்தின் சுவர்களில் திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறள் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.
Back to previous page