மாங்குளம்
Mangulam
அஞ்சல் குறியீடு ( PIN Code ) - 625104
சிறப்புகள்
இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும். மாங்குளத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில் உள்ள குகைகளில் தமிழ்ச் சமணத் துறவிகளின் படுக்கைகள் காணப்படுகின்றன.சமணத் துறவிகள் இங்கு கிபி 9ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர்.
மாங்குளம் கல்வெட்டுகள் 1882 ஆம் ஆண்டு இராபர்ட் சுவெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள மலையில் ஐந்து குகைகளில் நான்கில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவில்கள் :
மாங்குளம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில்
அம்மச்சி அம்மன் கோவில்
கருப்பசாமி கோவில்
மாங்குளம் வெற்றி விநாயகர் கோவில்
தொட்டிச்சி அம்மன் கோவில்
உடையம்மாள் கோவில்
பள்ளி
இந்து உதவி பெறும் தொடக்கப்பள்ளி
வங்கி:
கனரா வங்கி
கால்நடை மருத்துவமனை :
மாங்குளம் கால்நடை மருத்துவமனை
Back to previous page