முக்கியமான 4 மலைகள்
யானைமலை
மதுரையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த யானை மலை.4 கிலோமீட்டர் நீளம் கொண்டது.1209 மீட்டர் அகலம் உடையது. 400 மீட்டர் உயரம் உடையது. ஒரு யானை காலை மடக்கி துதிக்கையை தூக்கி படுத்திருப்பது போல காட்சியளிக்கிறது இந்த யானை மலை. இது சமண மலை யாக குறிப்பிடப்படுகிறது.இதற்கு ஆதாரங்களாக இந்த மலையில் சமண கல்வெட்டுகள் உள்ளது.
சமண மலையை உருவாக்கி அங்கு தவம் செய்த இரண்டு சமணம் முனிவர்களின் கல்வெட்டுகளும் இருக்கின்றது. அவர்களின் பெயர்கள் ஏரி ஆரிவன், அத்துவாயி அரட்டு காயிவன். எனவே இந்த முனிவர்களின் பெயரான இவ என்ற வடமொழி சொல் யானை என்று பொருள் தருகின்றது. எனவே இந்த மலைக்கு யானைமலை என்ற பெயர் வந்தது.இந்த மலையை சமண மலை என்று திருஞானசம்பந்தர் தேவாரத்தில் கூறியுள்ளார்.
பசுமலை கோவில்
இந்த கோவில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்பழங்காநத்தம் அடுத்து மாடக்குளம் என்ற பகுதியில் உள்ளது.இது ஒரு மலைக் கோயிலாகும்.
மாடக்குளம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டரில் மலையில் அமைந்துள்ளது. மலையின் கீழிருந்து சுமார் 550 படிகள் ஏரி சென்று கோயிலை அடையலாம். இக்கோயிலுள்ள கபாலீஸ்வரி அம்மனுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையில் நடைபெறும்.
நாகமலை திருக்கோவில்
இக்கோவில் மதுரையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் துவரிமான் வழியாக கொடிமங்கலம் என்ற ஊரிற்கு அருகில் அமைந்துள்ளது. கோவிலில் ராகுவும் கேதுவும் ஒன்றாக இணைந்த ஸ்தலம். இங்கு நூற்றாண்டு பழமையான மருத மரம் அமைந்துள்ளது.
அங்குள்ள நாகம்மன் சன்னதி வடக்கு திசை பார்த்து அமைந்துள்ளதால் விசேஷமானதாக கருதப்படுகிறது. இங்கு முத்துச்சாமி சித்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. இவர்தான் இந்தக் கோயிலை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.
அரிட்டாபட்டி
தமிழகத்தின் முதல் பல்லுயிர் சூழலியல் மண்டலமாக இது அமைந்துள்ளது.புத்த மத பிக்கு அரிட்டர் நினைவாக அரிட்டாப்பட்டி என்ற பெயர் வந்துள்ளது.இதன் பரப்பளவு 193.215 ஹேக்டெர் பரப்பளவு கொண்டுள்ளது. இங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குகைவரை சிவன்கோயில் அமைந்துள்ளது.
2200 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான குகை கோயில்கள் இங்கு உள்ளன. இங்கு 72 ஏரிகள் 7 மலை குன்றுகள் பல்வேறு நீரூற்றுகள் உள்ளன. இந்த சூழ்நிலையால் இங்கு 600க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள், 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்விடமாக கொண்டு இங்கு உள்ளன. 250 சமணப் படுகைகள் அமைந்துள்ளன.தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.
Back to previous page