முக்கியமான 5 திருவிழாக்கள்
மதுரை சித்திரை திருவிழா
1 ஆம் நாள் கொடியேற்றம்,கற்பக விருக்ஷம், சிம்ம வாகனத்தில் மக்களுக்கு காட்சி அளிப்பார்
2 ஆம் நாள் பூத வாகனம், அன்ன வாகனத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
3 ஆம் நாள் கைலாச பர்வதம், காமதேனு வாகனத்தில் காட்சியளிப்பார்
4 ஆம் நாள் தங்க பல்லக்கு வாகனத்தில் காட்சியளிப்பார்
5 ஆம் நாள் வேடர் பறி லீலை - தங்க குதிரை வாகனத்தில் அருள் பாலிப்பார்.
6 ஆம் நாள் சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
7 ஆம் நாள் : நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் காட்சி அளிப்பார்.
8 ஆம் நாள் மீனாட்சி பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா சுவாமி காட்சி அளிப்பார். .
9 ஆம் நாள் மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா சுவாமி அருள் பாலிப்பார்.
10 ஆம் நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - யானை வாகனம், புஷ்ப பல்லக்கு அருள் பாலிப்பார்.
11 ஆம் நாள் தேரோட்டம் - சப்தாவர்ண சப்பரத்தில் அருள் பாலிப்பார்.
12 ஆம் நாள் தீர்த்தவாரி - வெள்ளி விருச்சபை சேவை ,கள்ளழகர் எதிர்சேவையில் சுவாமி காட்சியளிப்பார்
13 ஆம் நாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் - 1000 பொன்சப்பரத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
14 ஆம் நாள் மண்டூக மகரிஷி மோட்சம் தருதல்.இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி .
15 ஆம் நாள் கள்ளழகர் மோகினி அவதார திருக்கோலம் - புஷ்ப பல்லக்கு சுவாமி காட்சியளிப்பார்..
16 ஆம் நாள் கள்ளழகர் திருமலை எழுந்தருளல் .
அழகர் கோயில் ஆடித் திருவிழா
அழகர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 10 நாட்கள் ஆடி பெருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைபெறும்.
திருவிழா விவரம்
முதல் நாள் கொடியேற்றம்
அன்று இரவு சுவாமி அன்ன வாகனத்தில் புறப்பாடு செய்து மக்களுக்கு காட்சி அளிப்பார்
இரண்டாம் நாள் காலை தங்கப் பல்லக்கிலும், மாலை சிம்ம வாகனத்திலும் சுவாமி காட்சியளிப்பார்.
மூன்றாம் நாள் மாலை அனுமார் வாகனத்தில் காட்சியளிப்பார்
நான்காம் நாள் மாலை கருட வாகனத்தில் காட்சியளிப்பார்
ஐந்தாம் நாள் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு மறவர் மண்டபத்திற்கு சென்று மக்களுக்கு அருள்காட்சி அளிப்பார். மாலை சேஷ வாகனத்தில் அருள் பாலிப்பார்.
ஆறாம் நாள் மாலையில் யானை வாகனத்தில் காட்சியளிப்பார்.
ஏழாம் நாள் மாலையில் புஷ்ப சப்பரத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
எட்டாம் நாள் மாலை தங்க குதிரை வாகனத்தில் வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமி அருள் காட்சி அளிப்பார்.
ஒன்பதாம் நாள் காலை சுவாமி தேவியர்களுடன் திருத் தேரில் காட்சியளிப்பார்.
பிறகு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அன்று இரவு பூ பல்லாக்கு சாமி காட்சி அளிப்பார்.
பத்தாம் நாள் மாலையில் புஷ்ப சப்பரத்தில் சுவாமி அருள் பாலிப்பார்.
நிகழ்ச்சியின் கடைசி நாள் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா
பங்குனித் திருவிழா இங்கு 15 நாட்கள் நடைபெறும்.
முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருவிழா.
இரண்டாம் நாள் மாலை விநாயகர் சுவாமி சப்பரத்தில் வலம் வருதல்.
மூன்றாம் நாள் காலை முருகப்பெருமான் தங்கப் பல்லாக்கில் தெய்வானை உடன் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிப்பார்.
நான்காம் நாள் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
ஐந்தாம் நாள் வெள்ளி பூத வாகனத்தில் காட்சியளிப்பார்.
ஆறாம் நாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளிப்பார்.
ஏழாம் நாள் சேஷ வாகனத்தில் காட்சியளிப்பார்.
எட்டாம் நாள் யானை வாகனத்தில் சாமி மக்களுக்கு காட்சி அளிப்பார்.
ஒன்பதாம் நாள் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியளிப்பார்.
பத்தாம் நாள் வெள்ளி ஆட்டுக் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு காட்சியளிப்பார்.
பதினொன்றாம் நாள் பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
பனிரெண்டாம் நாள் தங்க குதிரை வாகனத்தில் அருள் பாலிப்பார். அன்று முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரம் நிகழ்ச்சி நடைபெறும்.
13 ஆம் நாள் தங்கமயில் மற்றும் தங்க குதிரை வாகனத்தில் காட்சியளிப்பார். இன்று சூரசம்கார லீலை நடைபெறும்.
14 ஆம் நாள் பச்சைக் குதிரை வாகனத்தில் காட்சியளிப்பார். பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறும்
15 ஆம் நாள் வெள்ளி யானை வாகனத்தில் அருள் பாலிப்பார். சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும்.
பதினாறாம் நாள் காலை 6 மணி அளவில் திருத்தேரில் உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
17ஆம் நாள் தங்கமயில் வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிப்பார்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத் திருவிழா
முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா தொடர்ந்து சுவாமி தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனத்தில் கட்சி அளிப்பார்.
வாகனம்
தங்கச் சப்பர வாகனம்,
அன்ன வாகனம்,
காமதேனு வாகனம்,
சிம்ம வாகனம்,
குதிரை வாகனம்,
ரிஷப வாகனம்,
யாழி மற்றும் பல்லாக்கு வாகனங்களில்
தினந்தோறும் சாமி எழுந்தருளி மக்களுக்கு காட்சியளிப்பார்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா தைப்பூச பௌர்ணமி தினத்தன்று வெகு சிறப்பாக நடைபெறும்.
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா
இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.
முதல் நாள் கொடியேற்றம்.
திருவிழாவின் ஐந்தாம் நாள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்து மக்கள் நேர்த்தி கடன் செய்வார்கள்.
அன்று அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
திருவிழாவின் ஏழாம் நாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.
எட்டாம் நாள் பூ பல்லாக்கு வாகனத்தில் அம்மன் காட்சியளிப்பார்.
ஒன்பதாம் நாள் மாலை சட்ட தேரில் உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
பத்தாம் நாள் பக்தர்கள் மாவிளக்கு வைக்கும் பொங்கல் வைக்கும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
Back to previous page