திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்..,முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாக திகழ்கின்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், இக்கோயில் அளவில் பெரியதாகும்.
இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சுப்ரமணியசுவாமியின் கருவறை பொ.ஊ. 773இல் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன.
சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது.
கோவிலின் நுழைவுவாயிலில் ''முருகன் தெய்வானை திருமணக்கோலம்' உள்ளிட்ட 10 பெரிய கற்றூண்கள் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் இங்கு அவதாரம் எடுத்து , சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காத்ததால் ,தேவர்களின் தலைவனான இந்திரன் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் தன் மகளாகிய தெய்வயானையை, திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.
இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
Back to previous page