மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி திருவிழா

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேலூரில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஒவ்வொரு வருடம் ஆடி மாதம் நாகம்மாள் கோவில் திருவிழா நடைபெறும்.
பக்தர்கள் ஆடி மாதம் தொடக்கத்தில் காப்பு கட்டி ஆடி மாதம் கடைசி செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.
திருவிழாவின் முதல் நாளில் மேலுரின் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து நாகம்மாள் தேவியின் சக்தி கிரகம் எடுத்து கோயிலுக்கு வரப்படும். பிறகு பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், அழகு குத்தி நேத்திகடன் செலுத்துவார்கள்.
இரண்டாம் நாளில் பக்தர்கள் கோயிலில் மாவிளக்கு வைப்பார்கள். பிறகு முளைப்பாரி ஊர்வலம், சாமி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
திருவிழாவின் கடைசி நாளில் சக்தி கிரகத்தை மண் கட்டி தெப்பகுளத்தில் வைப்பார்கள்.முளைப்பாரியை தெற்குப்பட்டியில் கரைப்பார்கள். பிறகு நாகம்மாள் தேவி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.
பக்தர்கள் பால்குடம், அழகு குத்தி, பறவக்காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்கள் அம்மனுக்கு செலுத்துவார்கள்.
திருவிழாவை காண மேலூரை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் இங்கு வருவார்கள்.
திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
Back to previous page