கீழடி அகழ்வாராய்ச்சி

இடம்
மதுரையில் இருந்து தென் கிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த கீழடி அகழ்வாராய்ச்சி.
2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆராய்ச்சியின் படி கீழடியில் ஒரு தொல்லியல் மேடு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் இரண்டு தொல்லியல் ஆராய்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டது. அந்த அகலாராய்வின்போது பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் தமிழக தொல்லியல் துறை அங்கு ஆராய்ச்சி செய்தது.
கீழடியில் தமிழ் எழுத்து பொறித்த பல மண் ஓடுகள் கிடைத்தது. இந்த மண்ணோடுகளை ஆய்வு செய்த பொழுது இது கிமு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது அதன்படி அதில் பொறித்த தமிழ் எழுத்துக்கள் இருப்பதால் தமிழ் மொழி கிமு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே தோன்றியது என்று கூறப்படுகிறது.
அங்கு அறுபதுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உரை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்க ஆபரணங்களும் மற்ற சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில மிருகங்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு ஆறு பக்கங்களை கொண்ட விளையாட்டுப் பொருளான தாயக்கட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த தாயகட்டையை வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை கலித்தொகை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது எனவே சங்க இலக்கியங்கள் எழுதுவதற்கு முன்பாகவே இந்த விளையாட்டுக்கள் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
Back to previous page