அழகர் கோயில் ஆடித் திருவிழா

அழகர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 10 நாட்கள் ஆடி பெருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைபெறும்.
திருவிழா விவரம்
முதல் நாள் கொடியேற்றம்
அன்று இரவு சுவாமி அன்ன வாகனத்தில் புறப்பாடு செய்து மக்களுக்கு காட்சி அளிப்பார்
இரண்டாம் நாள் காலை தங்கப் பல்லக்கிலும், மாலை சிம்ம வாகனத்திலும் சுவாமி காட்சியளிப்பார்.
மூன்றாம் நாள் மாலை அனுமார் வாகனத்தில் காட்சியளிப்பார்
நான்காம் நாள் மாலை கருட வாகனத்தில் காட்சியளிப்பார்
ஐந்தாம் நாள் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு மறவர் மண்டபத்திற்கு சென்று மக்களுக்கு அருள்காட்சி அளிப்பார். மாலை சேஷ வாகனத்தில் அருள் பாலிப்பார்.
ஆறாம் நாள் மாலையில் யானை வாகனத்தில் காட்சியளிப்பார்.
ஏழாம் நாள் மாலையில் புஷ்ப சப்பரத்தில் சுவாமி காட்சியளிப்பார்.
எட்டாம் நாள் மாலை தங்க குதிரை வாகனத்தில் வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமி அருள் காட்சி அளிப்பார்.
ஒன்பதாம் நாள் காலை சுவாமி தேவியர்களுடன் திருத் தேரில் காட்சியளிப்பார்.
பிறகு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அன்று இரவு பூ பல்லாக்கு சாமி காட்சி அளிப்பார்.
பத்தாம் நாள் மாலையில் புஷ்ப சப்பரத்தில் சுவாமி அருள் பாலிப்பார்.
நிகழ்ச்சியின் கடைசி நாள் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.
Back to previous page