திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

முகவரி :
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் ,மதுரை - 625 005 .நடை திறப்பு :
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை , மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.சிறப்பம்சம் :
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்..,முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாக திகழ்கின்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், இக்கோயில் அளவில் பெரியதாகும்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை, ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகம் -
06.06.2011 இல் திருக்கோவிலில் மூலவ விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
சன்னதி :
சுப்ரமணியசுவாமி சன்னதி ,
துர்காதேவி சன்னதி ,
கற்பக விநாயர் சன்னதி ,
சத்தியகிரீஸ்வரர் சன்னதி ,
பவளக்கனிவாய்ப் பெருமாள் சன்னதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
ராஜ கோபுரம் :
கோயிலின் கோபுரம் 150 அடி உயரமுடையது.
கோவிலின் நுழைவுவாயிலில் ''முருகன் தெய்வானை திருமணக்கோலம்' உள்ளிட்ட 10 பெரிய கற்றூண்கள் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் இங்கு அவதாரம் எடுத்து , சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காத்ததால் ,தேவர்களின் தலைவனான இந்திரன் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் தன் மகளாகிய தெய்வயானையை, திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.
இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
பாலாபிஷேகம் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் உள்ள தங்க வேலுக்கு மட்டுமே செய்யப்படும்.
பூஜை :
எண் | பூஜை | நேரம் |
---|---|---|
1 | திருவனந்தல் பூஜை | 05:30 AM - 06:00 AM |
2 | விளா பூஜை | 07:00 AM - 07:30 AM |
3 | காலசந்தி பூஜை | 08:00 AM - 08:30 AM |
4 | திருக்கால சந்தி பூஜை | 10:30 AM - 11:00 AM |
5 | உச்சிக்கால பூஜை | 12:30 PM - 01:00 PM |
6 | சாயரட்சை பூஜை | 05:30 PM - 06:00 PM |
7 | அர்த்தஜாம பூஜை | 08:30 PM - 09:00 PM |
8 | பள்ளியறை பூஜை | 09:00 PM - 09:15 PM |
Back to previous page