பாண்டி முனீஸ்வரர் கோயில்

முகவரி :
மாட்டுத்தாவணி ,மதுரைநடை திறப்பு :
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.சிறப்பம்சம் :
இக்கோயில் மாட்டுத்தாவணி அருகில் அமைந்துள்ளது.
பாண்டி சாமி காவல் தெய்வமாக இங்கு அமைந்துள்ளார்.
இக்கோயில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கம்பீரமான மீசை மிரட்டக்கூடிய கண்கள் மிகப்பெரிய ஜடா முடி சங்கிலியால் கட்டப்பட்டுள்ளார் சுவாமி பாண்டி முனீஸ்வரர்.
வரலாறு
கண்ணகியின் கணவர் கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதை உணர்ந்து பாண்டிய மன்னன் நெடுஞ்செழிய பாண்டியன் அரியணையிலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
சிவ பெருமான் இவரை அழைத்து நீதிக்காக உயிரை விடுத்த உனக்கு பூலோகத்தில் மறுபிறவி உண்டு என்று சொல்கையில் பாண்டிய மன்னனும் மறுபிறவி வேண்டாம் அங்குள்ள மக்களுக்கு நல்லவர்களுக்கு உதவி செய்ய என்னை கடவுளாக ஆசீர்வதியுங்கள் என்று கூறினார். சிவபெருமானும் ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பினார்.
இங்கு பல வருடங்களாக சிவபெருமானுக்கு தவம் செய்து அங்கேயே சிலையாகி மறைந்து விடுகிறார் என்று கூறப்படுகிறது. இவரே இங்கு பாண்டி முனீஸ்வர் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தன்னுடைய இரண்டாவது பிறவியில் முனிவராக வந்து ஈஸ்வரருக்கு தவம் செய்ததால் பாண்டி முனீஸ்வரர் என்று கூறப்படுகிறார்.
இங்கு சமய கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது.
Back to previous page