பழமுதிர்சோலை முருகன் கோயில்

முகவரி :
சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ,பழமுதிர்சோலை ,அழகர்கோயில் ,மதுரை - 625301நடை திறப்பு :
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைசிறப்பம்சம் :
பழமுதிர்சோலை முருகன் கோயில் .., முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடாகும். அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது.
ஆறு படைவீடுகளில் முருகப்பெருமான் தனது மனைவி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுவாகும்.
மேலும் முருகப்பெருமான் அவ்வையார் பாட்டிக்கு சுட்டப்பழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய உன்னதமான தலம் இதுவாகும்.
நாவல் மரங்கள் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் காய்க்கும் என்பது தாவரவியலின் கோட்பாடு, ஆனால் இங்கு முருகப்பெருமானின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கோயிலில் உள்ள நாவல் மரங்கள் பழங்களைத் தரும்.
சோலை மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில் உள்ளது.
இதன் அருகில் பெருக்கெடுக்கும் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது.
விழாக்கள் :
- சூரசம்ஹாரம்
- கந்த சஷ்டி
- கார்த்திகை தீபம்
- வைகாசி விசாகம்
- பங்குனி உத்திரம்
அன்னதானம்
தினசரி 12 மணிக்கு வழங்க படுகிறது
Back to previous page