முக்தீஸ்வரர் திருக்கோவில்

முகவரி :
முக்தீஸ்வரர் திருக்கோவில்,தெப்பக்குளம் ,மதுரை -652009நடை திறப்பு :
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் 8.30 மணி வரைசிறப்பம்சம் :
முக்தீஸ்வரர் திருக்கோவில் ,மன்னர் திருமலை நாயக்கரின் சகோதரரான முத்து வீரப்ப நாயக்கரால் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது.
சூரியன் ஆண்டிற்கு இரண்டு முறை மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில் சில விநாடிகள் மட்டும் தனது ஒளிக்கிரணங்களால் சுவாமியை பூஜை செய்வார்.
சன்னதி :
ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம்.
முன்புறம் உயரமான நந்தி,
ஆஞ்சநேயர் சன்னதி ,
நடராஜர் சன்னதி ,
கிருஷ்ணன் சன்னதி ,
சுப்பிரமணியர் சன்னதி ,
துர்க்கை சன்னதி ,
விநாயகர் சன்னதி உள்ளன.
வில்வம் :
கோவில் வளாகத்தில் கிலுவாய், நெல்லி, மாவிலங்கை மற்றும் சாதாரண வில்வம் நான்கு வகையான வில்வம் மரங்கள் உள்ளன
திருவிழா
ஆடி, தை மாதத்தில் விளக்கு பூஜை.
பிரதோஷ பூஜை,
மகாசிவராத்திரி,
நவராத்திரி இங்கு சிறப்பாக நடைபெறும்.
Back to previous page