மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

முகவரி :
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,மதுரை - 625 001
நடை திறப்பு :
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 10.00 மணி வரை.
சிறப்பம்சம் :
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ..,
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவலோகத்தின் அரசனான இந்திரனால் கட்டப்பட்டது.
கோபுரங்கள் :
எட்டுகோபுரங்கள் இருக்கின்றன.
இதில் நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.
1 , கிழக்குக் கோபுரம் - முதன்முதலில் பாண்டியர்களால் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டு பிற்காலத்தில் கட்டப்பட்ட இக்கோபுரம் 153 அடி உயரம் உடையது.
2 , மேற்குக் கோபுரம் - மாறவர்மன் குலசேகர பாண்டியனால் கி.பி. 1323 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் 154.6 அடி உயரம் உடையது.
3 , தெற்குக் கோபுரம் - மன்னர் விசுவநாத நாயக்கரால் கி.பி. 1559 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் 160 அடி உயரம் உடையது.
4 , வடக்குக் கோபுரம் - முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரால் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் 152 அடி உயரம் உடையது.
சன்னதி :
மண்டபத்தின் வழியே உள்ளே சென்றால் அருள்மிகு மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது.
அருகில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது.
வடமேற்கு மூளையில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் அருள்மிகு சங்கத்தார் சன்னதி உள்ளது.
சுவாமி சன்னதியில் வடக்கே, இரண்டாவது பிரகாரத்தின் வடபுறம் அருள்மிகு கல்யாண சுந்தரர் சன்னதி உள்ளது
தெற்குக் கோபுரம் வழியாக செல்லும் போது இடதுபுறம் காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளது.
சுந்தரேஸ்வரர் சன்னதி வலது பக்கத்தில் வெள்ளி கவசம் அணிந்த நடராஜர் சன்னதி உள்ளது.
நடராஜர் இடது காலை ஊனி வலது காலை தூக்கி மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் திருஞானசம்பந்தர் சிலை உள்ளது.
சுற்றி வரும் பொழுது படிக லிங்கம் உள்ளது. எல்லாம் வல்ல சித்தர் சன்னதி உள்ளது.
இங்கு வளரும் ஆஞ்சநேயர் மக்களுக்கு காட்சி அளிப்பார்.
வெண்ணெய் காளி சன்னதி உள்ளது.
பிரசாதம் தரும் இடத்திற்கு எதிரில் தாயுமானவர் சுவாமி தூண் உள்ளது.
கோயிலின் மத்தியில் பெரிய பொற்றாமரைக்குளம் அமைந்துள்ளது.
அழகிய மண்டபங்கள் :
- மீனாட்சி நாயக்கர் மண்டபம்,
- ஆயிரங்கால் மண்டபம்
- திருக்கல்யாண மண்டபம்
- புது மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம் :
ஆயிரங்கால் மண்டபம், சுவாமி சன்னதியின் இடதுபுறத்தில் உள்ளது.
இம்மண்டபம், மற்ற மண்டபங்களை விட பெரியது.
இம்மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளது.
இங்கு இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன.
புதுமண்டபம் :
இம்மண்டபம்., கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே, 124 சிற்பத்தூண்கள் உள்ளது.
பூஜை :
எண் | பூஜை | நேரம் |
---|---|---|
1 | திருவனந்தல் பூஜை | 05:30 AM - 05:45 AM |
2 | விளா பூஜை | 06:30 AM - 07:15 AM |
3 | காலசந்தி பூஜை | 10:30 AM - 11:20 AM |
4 | மாலை பூஜை | 04:30 PM - 05:15 PM |
5 | அர்த்தஜாம பூஜை | 07:30 PM - 08:15 PM |
6 | பள்ளியறை பூஜை | 09:30 PM - 10:00 PM |
சேவை - கட்டண விவரம் :
எண் | சேவை | கட்டணம் |
---|---|---|
1 | மாவிளக்கு | 2.00 |
2 | அர்ச்சனை | 5.00 |
3 | சிறப்பு நுழைவு கட்டணம் அம்மன் அல்லது சுவாமி | 50.00 |
4 | சிறப்பு நுழைவு கட்டணம் அம்மன் மற்றும் சுவாமி | 100.00 |
5 | திருவிளக்கு பூஜை | 200.00 |
6 | அருள்மிகு அம்மன் சுவாமி அபிஷேகம் | 1300.00 |
7 | உபய தங்கரதம் | 1501.00 |
8 | உபய திருக்கல்யாணம் | 1501.00 |
அன்னதானம் :
2020-ஆம் ஆண்டிலிருந்து தினசரி திருக்கோயிலுக்கு வருகை தரும் 700 நபர்களுக்கு நண்பகல் 12.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
Back to previous page