பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

முகவரி :
பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்,தல்லாகுளம் ,மதுரை - 625002நடை திறப்பு :
காலை 5.30 மணிமுதல் 12மணிவரை ,மாலை 4.30 மணிமுதல் 9 மணி வரைசிறப்பம்சம் :
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்.,மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில், மூலவர் ஸ்ரீநிவாசர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
சன்னதி :
கிருஷ்ணருக்கு நவநீத கிருஷ்ணன் சன்னதி உள்ளது .(இதில் குழந்தை வடிவில் காட்சி தருகிறார் )
இங்கு நவக்கிரகம் சன்னதி , விநாயகர் சன்னதி , மண்டபத்தின் உள்ளே ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.
திருவிழா :
ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று கோவிலின் மாற்று திருக்கோலச் சேவை திருவிழாவின் போது பெயருக்கு ஏற்றாற்போல் வேடமிட்டு பெருமாளும் ஆண்டாளும் கோவிலை வலம் வருவார்கள்.
மாசி மாத பௌர்ணமி நாளில், வெங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றிற்கு வந்து கஜேந்திர மோட்சம் தருகிறார்.
வைகுண்ட ஏகாதசி,
சித்திரை பவுர்ணமி திருவிழா,
புரட்டாசித் திருவிழா (பிரமோத்சவம்)
முக்கியத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
Back to previous page