மதுரை ஜல்லிக்கட்டு திருவிழா

ஒவ்வொரு வருடமும் தை மாதம் பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும்.
உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஜனவரி 15, பாலமேட்டில் ஜனவரி 16, அலங்காநல்லூரில் ஜனவரி 17 அன்று மிகச் சிறப்பாக நடைபெறும்.
போட்டியில் வாடி வாசலில் இருந்து வரும் காளையை அடக்க காளையர்கள் விளையாடுவார்கள்.
காளை தொடுகோட்டை தொட்டுச் சென்றால் காளை வெற்றி என்றும், பிடிப்பட்டால் காளையர்கள் வெற்றி என்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
இங்கு காளைகளை தங்கள் வீட்டில் உள்ள ஒரு மனிதரை போல் வளர்ப்பார்கள்.கோவில் காளைகளை தெய்வங்களாக மக்கள் வளர்ப்பார்கள்.
போட்டியில் கலந்து கொள்ளும் காளையர்கள் 18 வயது முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும்.
Back to previous page