முக்கியமான 7 சுற்றுலா தளங்கள்
திருமலை நாயக்கர் அரண்மனை :
திருமலை நாயக்கர் அரண்மனை , மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டினார் .இந்த அரண்மனை , 58 அடி உயரம் கொண்டது.இந்த அரண்மனையில் 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன.
அக்காலத்தில், இங்கு சொர்க்க விலாசம் , அரங்க விலாசம் என்ற இரண்டு முக்கிய பகுதிகள் அமைந்திருந்தது.சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும்,அரங்க விலாசம் அவரது தம்பி வசிப்பிடமாகவும் இருந்தது.உள்ளே சென்றவுடன் மன்னர் பயன்படுத்திய பெரிய சிம்மாசனம் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
ஒலி-ஒளி காட்சி :
நாள்தோறும் மாலை 6.45 க்கு ஆங்கிலத்திலும்,
இரவு 8 மணிக்கு, தமிழிலும் நடைபெறுகிறது.
காந்தி மியூசியம் :
காந்தி மியூசியம்.., ஏப்ரல் 15 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.மகாத்மா காந்தி அவர்கள் மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார்.இந்தியாவிலேயே முதன்முதலாக மகாத்மா காந்தி அருங்காட்சியகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இந்த நினைவு இல்லம் இருக்கின்றது.
இங்கு காந்திஜி உபயோகப்படுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன.கோட்சேவினால் மகாத்மா படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.124 காந்திஜியின் குழந்தை பருவ நிழற்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.அவர் பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, போர்வை, சால்வை, காலணி போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.அவர் கைப்பட எழுதிய கடிதம் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தெப்பக்குளம் :
மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் தெப்பக்குளம் கட்டப்பட்டது. தென் தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம் இதுவாகும்.இதன் பரப்பளவு 40 ஏக்கர் உள்ளது. இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. சுமார் 15 அடி உயரத்துக்கு தெப்பக்குளத்தின் நான்குபுறமும் கல்லினால் சுவர் கட்டப்பட்டிருக்கிறது.
அங்கு நடுவில் அழகான தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு விநாயகர் சிலை உள்ளது.வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது.
அதிசயம் (பூங்கா) :
"இந்திய தீம் பூங்காக்களின் ராணி" என்று அழைக்க படும் அதிசயம் 2000 ஆம் ஆண்டு தொடங்க பட்டது.அதிசயம் பூங்காவின் பரப்பளவு 70 ஏக்கர்கள் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன் சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் போன்றவை காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் கண்காட்சி உள்ளது.நிறைய வாட்டர் ரைடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நேரம் :
காலை 10:00 AM மணிமுதல் மாலை 6:30 PM மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும்.
டிக்கெட் விலை :
பெரியவர்களுக்கு 700 ரூபாய் ,சிறியவர்களுக்கு 400 ரூபாயாக உள்ளது.
உலக தமிழ்ச் சங்கம்
தல்லாகுளம் பகுதியில் காந்தி மியூசியம் அருகில் அமைந்துள்ளது.1981இல் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அன்றைய முதல்வர் திரு எம் ஜி ஆர் அவர்கள் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.பிறகு 2011 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் அமைக்க சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கி பணி தொடங்க உத்தரவிட்டார்.
உலக தமிழ் சங்கத்தின் மாடியில் இடது பக்கத்தில் ஒரு மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ளது. உலக தமிழ்ச்சங்கத்தின் மாடியில் வலது பக்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியின் செய்தி குறிப்புகள் மற்றும் அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வைக்கப் பட்டுள்ளது.
கீழடியில் கிடைத்த தங்க உபகரணங்கள் தோடு, செயின் போன்ற பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.அங்கு கிடைத்த உரை கிணறும் இங்கு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.கீழடியில் கிடைத்த தமிழ் மொழி பொறித்த மண் ஓடுகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.இங்கே பார்வையாளர் அரங்கம் உள்ளது.உலக தமிழ் சங்கத்தின் சுவர்களில் திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறள் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி
மதுரையில் இருந்து தென் கிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த கீழடி அகழ்வாராய்ச்சி.2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆராய்ச்சியின் படி கீழடியில் ஒரு தொல்லியல் மேடு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் இரண்டு தொல்லியல் ஆராய்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டது. அந்த அகலாராய்வின்போது பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.அதன் பின்னர் தமிழக தொல்லியல் துறை அங்கு ஆராய்ச்சி செய்தது.
தங்க ஆபரணங்களும் மற்ற சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சில மிருகங்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டது.இங்கு ஆறு பக்கங்களை கொண்ட விளையாட்டுப் பொருளான தாயக்கட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தாயகட்டையை வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை கலித்தொகை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது எனவே சங்க இலக்கியங்கள் எழுதுவதற்கு முன்பாகவே இந்த விளையாட்டுக்கள் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
குட்லாடம்பட்டி அருவி
மதுரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வாடிப்பட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.சிறுமலை முகட்டு சரிவிலிருந்து வருகிற நீர் இந்த நீர்வீழ்ச்சியில் விழுகிறது.இதை மதுரை மக்கள் சின்ன குற்றாலம் என்று அழைப்பார்கள்.
குட்லாடம்பட்டி அருவிக்கு படாகை நாச்சியம்மன் அருவி என்ற மற்றொரு பெயரும் உள்ளது.
Back to previous page