முக்கியமான 4 பொழுதுபோக்கு இடங்கள்
தமுக்கம் பொருட்காட்சி
தமுக்கம் பொருட்காட்சி கோரிப்பாளையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது மதுரையில் தமுக்கம் பொருட்காட்சி ஏப்ரல் 29 ல் தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது.பொருட்காட்சி மாலை 4 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். கட்டணம் பெரியவர்களுக்கு 15 ரூபாயாகவும் சிறியவர்களுக்கு 10 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியில் 27 அரசு ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றது.12 அரசு சார்பு நிறுவனங்களின் சார்பாக அமைக்கப்படுகின்றது.25க்கும் மேற்பட்ட தனியார் ஸ்டால் இடம் பெற்றுள்ளன.மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், கலை நிகழ்ச்சி இங்கு இருக்கின்றது.
விஷால் டி மால்
இது மதுரை தல்லாகுளத்திற்கு அடுத்து சின்ன சொக்கி குளம் பகுதியில் அமைந்துள்ளது.இதன் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.இங்கு 60க்கும் மேற்பட்ட ஷாப்பிங் கடைகள் இருக்கின்றது.துணிக்கடை நகைக் கடை மொபைல் கடை எலக்ட்ரானிக்ஸ் கடை என பல்வேறு கடைகள் அமைந்துள்ளது.
இங்கு முதல் மூன்று மாடியில் ஷாப்பிங் கடைகள் உள்ளது. நான்காவது மாடி உணவு சாப்பிட கடைகள் உள்ளது.ஐந்தாவது மாடியில் குழந்தைகள் விளையாட விளையாட்டுத்தளம் அமைந்துள்ளது.ஆறாவது மாடியில் ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஐந்து ஸ்கிரீன்களுடன் அமைந்துள்ளது.
மதுரை ECO பார்க்
இந்த பார்க் மதுரை கோரிப்பாளையம் அருகே மதுரை கார்ப்பரேஷன் உள்ளே அமைந்துள்ளது.
மூன்று வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு டிக்கெட் விலை ஐந்து ரூபாயாக உள்ளது .
காலை 9.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 5 மணி முதல் ஒன்பது மணி வரை பூங்கா திறந்திருக்கும்.பூங்காவின் முன்பே வந்தவுடன் நிறைய மரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
கிருத்திகை அத்தி மரம், விசாகம் விளாமரம், உத்திரம் அரளி மரம் போன்ற பல மரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
பழைய இரும்பு மற்றும் பைக்கில் உதிரி பாகங்கள் ஆகியவற்றை வைத்து சில பிரமாண்ட பொருட்கள் செய்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.ஒட்டகம், கொக்கு, மான், குதிரை, ஆந்தை,காளை போன்ற காட்சிப் பொருட்கள் பழைய இரும்பு மற்றும் வண்டியின் உதிரி பாகங்கள் ஆகியவற்றை வைத்து செய்து வைக்கப்பட்டுள்ளது.மகாத்மா காந்தியின் திருஉருவச்சிலையை பழைய இரும்பு பொருட்களால் செய்து வைக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஈகிள் பார்க்
இது மதுரை காளவாசல் அருகே பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ளது.டிக்கெட் விலை பெரியவர்களுக்கு 30 ரூபாயாகவும் சிறியவர்களுக்கு 20 ரூபாயாக உள்ளது.உள்ளே நுழைந்த உடன் பெரிய பெரிய விலங்குகள் செயற்கையாக அசையும் வகையில் செய்யப்பட்டு விலங்கு சத்தம், மற்றும் ஒளி ஆகியவற்றுடன் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
பாண்டா கரடி,சிங்கம், புலி, ஜுராசிக் பார்க்,யானை போன்ற பல்வேறு விலங்குகள் வைக்கப்பட்டுள்ளது.பிறகு இங்கு விளையாட நிறைய விளையாட்டு பொருட்கள் மற்றும் பால் துரோ விளையாட்டு, சூட்டிங் கேம் போன்ற பல விளையாட்டுக்கள் உள்ளன.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாட எக்ஸிபிஷன் இல் உள்ளது போல சிறிய ராட்டிணங்கள் மற்ற விளையாட்டுக்கள் உள்ளன.
Back to previous page